search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் போர்க்களம்"

    இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே போர் நடந்த முன்னாள் போர்க்களத்தில் இருந்து சுமார் 38 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. #SriLanka
    கொழும்பு:

    இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள முன்னாள் போர்க்களத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக குழி தோண்டப்பட்ட போது அங்கு எலும்புக்கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கட்டிட வேலை நிறுத்தப்பட்டு அந்த இடம் மாஜிஸ்திரேட் பிரபாகரனின் மேற்பார்வைக்குள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது, அந்த பகுதியில் இருந்து சுமார் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் தற்போது மன்னார் மருத்துவமனையில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்ட இலங்கையின் முன்னாள் போர்க்களமானது, கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2009 வரை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் அரசுப்படைக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் ஆகும். விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மன்னார் பகுதியை கைப்பற்றியபோது, இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான படைகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே இங்கு போர் நடைபெற்றது.

    இலங்கையில் தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டதோடு சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ராஜபக்சே அரசால் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீது குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLanka
    ×